கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18:
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
— பாவலர் ரியாஸ்
குமரி மாவட்ட செய்தியாளர்
