குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்:
குமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு மனநல நிறுவனங்களும், ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போதைய நிலைக்கு பதிவு பெறவில்லை எனக் கண்டறியப்பட்ட அனைத்து மனநல மையங்களும் உரிய முறையில் முதன்மை செயலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பங்கள் tnamhe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்
