திருநெல்வேலியில பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று [ஜன.13] சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமை வகித்தார். விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து விழாவினை, மிகச்சிறப்பாக நடத்தினர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய உரையில், குறிப்பிட்டதாவது: “பொங்கல் விழா என்பது. அனைத்து சமுதாயத்தினராலும் விரும்பி கொண்டாடப்படும், ஒரு பொதுவான பண்டிகை ஆகும். அதன் அடிப்படையில் நாமும் கொண்டாடி மகிழுகின்ற, இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ள அனைத்து காவல்துறையினர் மற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர் ஆகியோருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், என்னுடைய இனிய இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!”- இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.