தென்காசி ஜன- 30.
தென்காசி மாவட்டம் சுரண்டை யில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழையும் தமிழ் மக்களையும் திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் என கனிமொழி கருணாநிதி எம்பி பேசினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்க்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.சுந்தர மகாலிங்கம்,தமிழ்ச்செல்வன், கென்னடி,கனிமொழி, செல்லத்துரை,ஷெரிப், முத்துப்பாண்டி,ஜேசு ராஜன்,ரஹிம்,ராஜேஸ்வரன், சமுத்திர பாண்டியன்,கதிர்வேல் முருகன்,சாமிதுரை,தமிழ் செல்வி, ரவிச்சந்திரன்,கூட்டுறவு கணேசன், கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகசாமி வரவேற்புரையாற்றினார்.எ.பி.அரு அருள் தொகுத்து வழங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ,ஊடகப் பிரிவு இணைச்செயலாளர் கவிஞர் சல்மா,ராணி ஸ்ரீகுமார் எம்பி,டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, சிறப்புரை ஆற்றினார்கள்.
கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் உதவி தொகை வழங்கி கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது சமீப காலமாக திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரியார் மீதும் திராவிட அரசு மீதும் பழித்து பேசுகின்றனர். நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்பவர்களை எதிர்த்து அரசியல் செய்கிறோம்.குலத் தொழில் தான் செய்ய வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக குலத்தொழில் செய்பவர்களுக்கு தான் கடன் வசதி என்று இல்லாமல் ஜாதி,மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம்,பொறியாளராகலாம் என்ற உயர்ந்த நோக்கோடு மாவட்டம் தோறும் மாடல் பள்ளிகளை நடத்தி கல்வியில் நூறு சதவீதம் தமிழ்நாடு முன்னேறி உள்ளது.
இது தான் திராவிட மாடல் அரசு. குஜராத் முதல்வராகவும், மூன்றாவது முறையாக பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ள மோடி ஆட்சி செய்த குஜராத் ஐம்பது சதவீத கல்வி அறிவை கூட இன்னும் பெறவில்லை.
அவர்கள் கூறுகிறார்கள் நாம் என்ன பாடத்தை கற்க வேண்டும் என்று. கல்வி அறிவில் முன்னோடியாக உள்ள நாம் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளை பறிக்கும் சட்டத்திற்கும், டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கும் ஒன்றிய அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு தற்போது அதிமுக நாடகமாடுகிறது. தமிழுக்கும், தமிழருக்கும் எதிராக ஒன்றிய அரசு ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது. தமிழையும்,தமிழ் மக்களையும் திராவிட மாடல் அரசு பாதுகாக்கும்.
பெரியார் மண் என்ற திமிரோடு ஒன்றிய அரசை நாம் எதிர்க்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன்,சிவன் பாண்டியன், மகேஷ் மாயவன்,மாரி வண்ணமுத்து,சீனித்துரை, அழகு சுந்தரம், திவான்ஒலி,சுரேஷ், நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன்,அப்பாஸ், மாணவரணி ரமேஷ்,பொன் சல்வன்,வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், ஒப்பந்ததாரர் சண்முகவேலு, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது, கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆபத்துகாத்தான் ,பி.எஸ்.அண்ணாமலை,மகளிர் அணி திவ்யா மணிகண்டன், சங்கீதா சுதாகர்,பேரூர் செயலாளர் முத்து, அழகேசன்,முத்தையா, ராஜராஜன்,வெள்ளத்துரை, பண்டாரம்,சங்கர்,சுடலை, ஜெகதீசன்,நெல்சன்,லட்சுமணன், கோபால்,சிதம்பரம்,முகமது உசேன், அவைத் தலைவர் சுப்பிரமணியன், பூல் பாண்டியன், சாமுவேல் மனோகர்,ஆலடிப்பட்டி எஸ்கேஆர், சசிகுமார்,வைகை கணேசன், குறுங்காவனம் வெள்ளத்துரை பாண்டியன்,கவுன்சிலர் பரமசிவன்,சிவகுருநாதபுரம் ஐஎம்கே,மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.