விழுப்புரம், டிச.8-
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திங்கள்கிழமை இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆ.சௌரிராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ரா.பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) டி. பிராங்க்ளின் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் (எம் எல் ஏ) ஆகியோர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர்கள் வாழ்வை அடிமையாக்கி நாசமாக்கும் 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
