கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், CSW பவுண்டேசன் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு குறித்து. விழிப்புணர்வு முகாமை, கோவை மாந்கராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர்,
கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு கலப்படம் கலந்து வரும் உணவு பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து உணவு பாதுகாப்பு முறையை பற்றி மாணவ மாணவிகளிடையே உணவு பாதுகாப்பு அலுவலருடன் இணைந்து சிறப்புறையாற்றினார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஜான் பாத்திமராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர் சொல்வல்லன்.
CSW பவுண்டேசன் செயலாளர் ஹரிஷ்குமார், துணை செயலாளர் பாசில்ரஹ்மான் , கிருஷ்ணா கலைக்கல்லூரி துணை பேராசிரியர் சமூக பணித்துறை மோகன பிரியா, உடற்கல்வி ஆசிரியர் தேவேந்திரன் பட்டதாரி ஆசிரியை தமிழ் தேவி, மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி 2 துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மார்க்கெட் மூர்த்தி கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவைமாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்.
