மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் நிறுவன சி.எஸ்.ஆர் திட்டம் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சி.எஸ்.ஆர் மேனேஜர் பண்டிட் கங்காதர் படேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பேசுகையில், பி.எஸ்.எஸ் சொனாடா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சி.எஸ்.ஆர் திட்ட மூலம் மாணவர்களுக்கு பல உதவிகளை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. மாணவர்கள் இது போன்ற உதவிகளை நன்கு பயன்படுத்தி கொண்டு படித்து முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தான் முக்கியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து ஒரு ரோல் மாடலாக திகழ வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் டி.பிரசாந்த் நாயக் மற்றும் பி.எஸ்.எஸ் சொனாட்டா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில தலைமை நிர்வாகி பி.விவேக் ஆகியோருக்கு பி.எஸ்.எஸ் சொனாட்டா நிறுவனம் சார்பில் வரவேற்று சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி எஸ் எஸ் சொனாட்டா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் பணியாளர்கள், கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
