உலக சர்வதேச யோகா தினத்தையும் கொண்டாடும் விதமாக அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் செயலர் அவர்களும், மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். ரா .ரவிச்சந்திரன் கல்லூரியின் யோகா மன்ற பொறுப்பு ஆசிரியர் பூ.திருப்பதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
யோகா பயிற்சியினை வழங்க வாழ்க வளமுடன் பேராசிரியர் ரோஜா ஈஸ்வரி, மற்றும் பெருமாள் சாமி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா முக்கியத்துவம் மற்றும் பயிற்சியினை வழங்கினர்.

இதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டு யோகாவின் பலன்களை அறிந்து கொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாக்யராஜ், சண்முகசுந்தரம், தமிழ் நாயகன் உடற் கல்வி இயக்குனர் அ.சக்திவேல், ஆகியோர் உடனிருந்து நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர்.
