திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்லைவர் கா.பொன்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்.