திருநெல்வேலி,நவ.15: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியவை சார்பாக, “ஊட்டச்சத்தை உறுதி செய்!” திட்டத்தின் 2-ஆம் தொகுப்பு தொடக்க விழாவினை அரியலூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று [நவ.15] துவக்கி வைத்தது, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியிலுள்ள, குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் ஆகியோருடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்திற்கான, மாவட்ட திட்ட அலுவலர் பர்வத ராணி, புள்ளியியல் ஆய்வாளர் சம்சுத்தீன், வட்டார திட்ட அலுவலர் ஜொசிட்டால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
