விளையாட்டு
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அங்குள்ள ஐ கோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் வாடிவாசலில் பாரம்பரிய முறைப்படி காளைகளை அவிழ்த்துவிடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது….
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு
கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…
விழுப்புரம் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை தங்கம் வென்ற தங்கமகள் வரவேற்பு.
உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் 24 முதல் 28 வரை நடைபெற்ற 69 ஆவது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டியில் தமிழகத்திலே முதல்முறையாக பெண்கள் அணியில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்ற விழுப்புரம் தங்க மகள் K.பூமிகா சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று உள்ளது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்கம் மதுமிதா (விழுப்புரம்), சஞ்சனா(சென்னை), முத்அரசி(விழுப்புரம்), ரீனா(விழுப்புரம்). 19…
உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.
உடுமலை நவம்பர் 19. 14வது ஆடவர் ஹாக்கி இடையே உலகக் கோப்பை 20 25 விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை வித்தியாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பைமற்றும் போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே பொள்ளாச்சி…
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி, நவ.1:- பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று (நவம்பர்.12) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியல், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்த, 2025-ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி, இளையோர் உலக கோப்பையினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் புடைசூழ வரவேற்று, காட்சி படுத்தினர். 2025- ஆம் ஆண்டுக்கான, 21-…
பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..
உடுமலை, அக்டோபர் 12- உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன. உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன்…
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி..
அக்டோபர் 11.உடுமலை- உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சேரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 5வது மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பகத்சிங்…
50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..
பொள்ளாச்சி விசுவதித்தி மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்வு சிலம்பம் கொண்டு நடைபெறுகிறது. சுமார் 222 மாணவர்கள் ஒன்றிணைந்து 50 மணி நேரம் 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஜாய் கரிப்பாய் மற்றும் சோழ உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் ஆர்த்திகா காளீஸ்வரன் செயலர்,…
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..
திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….
- 1
- 2
