திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.
இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.
இந்த நீர் தேக்கத்திலிருந்து அருகில் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதுசமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்