இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி குற்றாலம் ஆய்வாளர் மனோகரன் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மேலும் சுகாதார ஏற்பாடுகளை குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியும் சுகாதார அலுவலருமான ராஜகணபதி மூலமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தோடு குற்றால நாதரை வணங்கி சென்றனர்.