Headlines

திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பகுதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாடிக்கொம்பு அடுத்துள்ள கோவில்பட்டி, குருநாத நாயக்கனூரில் விதிகளை மீறி கல்குவாரி ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு கடின பாறைகளை உடைத்து கற்களாக மாற்றும் உரிமத்தை மணிக்கண்ணன் மகன் சங்கர் என்பவர் பெற்றுள்ளார்.

பொதுவாக அரசு ஒப்பந்தம் பெரும் தொழில்களில் அனைத்து விதிகளையும் பின்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பொதுமக்களுக்கு விரோதமாகவும் ஆபத்தான முறையில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் விதிகளை மீறி இந்தக் கல்குவாரி இயங்கி வருகிறது.

இந்த கல்குவாரி சம்பந்தமாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவிக்கவே பத்திரிகையாளர்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தனர். ஆனால் அதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லை சேர்ந்த பத்திரிகையாளர் பாலசிந்தன் என்பவர் மாவட்ட சரவணன் இடம் நேரிலும் தபால் மூலமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து இருந்தார்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பாலசிந்தன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல போட்டிருந்தார். அந்த வழக்கானது கடந்த 12ஆம் தேதி திங்கள்கிழமை நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்திருந்தது. நீதி அரசர்கள் விசாரணை செய்து நான்கு வாரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கினை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பு இந்த வழக்கிற்காக மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் P . முகமது கலிபுல்லா,M. ஷேக் அப்துல்லா மற்றும் A. அருணாச்சலம் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *