பழனி | மார்ச் 27, 2026
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு பழனி தொகுதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து, அக்கட்சியினர் நடத்திய தீவிர போராட்டத்தால் பழனி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேங்காய் உடைத்து எதிர்ப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு போதிய இடங்கள் அல்லது குறிப்பிட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, பழனி தொகுதி பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று காலை பழனி நகர பாஜக அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர்.
தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, அலுவலக வாசலில் தேங்காய்களை உடைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
