திருநெல்வேலி,நவ.3:-
ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா இன்று (நவம்பர்.3) காலையில், பாளையங்கோட்டை மண்டலம், சாந்திநகர் மற்றும் ரகுமத்நகர் பகுதிகளில், மழைக்காலத்தில் சேகரமாகும், மழைநீர் தேங்காத வண்ணம் பாளையங் கால்வாய், “கக்கன் நகர்” குளத்திற்கு செல்லும் வகையில், புறவழி சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும், சுகாதார மேம்பாட்டு பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசிய ஆணையாளர், பணிகளை விரைந்து முடித்திட, அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேலப்பாளையம் மணடல சுகாதார அலுவலர் சாகுல்அமீது , சுகாதார ஆய்வாளர் சிந்து செல்வி உட்பட, பலர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
