உடுமலை
நவம்பர் 15.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவியர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் ஏற்பாட்டில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு குழந்தைகள் விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கோவை விமான நிலையத்தில் முதன்முதலாக விமானத்தில் பறக்க இருந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.
முதல் முதலாக விமானத்தில் பறந்த பள்ளி குழந்தைகள் மிகுந்த உற்சாகமும் , மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அரசு பள்ளி குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நினைவாக்கிய எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
