கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் பல்வேறு துறைகளுக்கு ரூ.66 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இதன்படி, வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் ஆகிய துறைகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தத்தில் ரூ.66 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
— பாவலர் ரியாஸ், குமரி மாவட்ட செய்தியாளர்
