திருநெல்வேலி,நவ.1:-
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-
“அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்தி, செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயர் பதவியில் இருந்து கொண்டு, தமிழகம் குறித்த வார்த்தைகளை, பிரதமர் மோடி பயன்படுத்தி இருக்க வேண்டாம். பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் செய்து வரும் துன்பத்தால் தான், அங்கிருந்து புலம் பெயர்ந்து பீகார் மக்கள், தமிழகத்துக்கு வந்துள்ளனர். தமிழகத்தில், எநதவொரு வடமாநிலத்தவரும் தன்பப்படுத்தப்படுவது இல்லை. வடமாநிலங்களில் இருந்து வந்து, தமிழகத்தில் வசித்து வரும் வடமாநில மக்கள் இலவச பஸ் பயணம், படிப்பில் உதவித்தொகை உள்ளிட்ட, தமிழக அரசின் திட்டங்களால், பயன் பெற்று வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு ஆகியவற்றை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி, திட்டத்தை செயல்படுத்து வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அணைகளை இணைப்பதில், சில சிக்கல்கள் உள்ளன.
அந்த சிக்கல்களை தீர்த்து, அணைகளை இணைக்க முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எடுப்பார். நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணி இடங்களில், தகுதியான நபர்களை, நேர்மையாக வெளிப்படை தன்மையோடு, அண்ணா பல்கலைக்கழக உதவியுடன், அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளார். இந்த பணிநியமனத்தில், எந்த தவறும் நடைபெறவில்லை. அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு, பணி நியமனத்தில் ஊழல் நடந்து இருப்பதாகக்கூறி, விசாரணை நடத்திட கடிதம் அனுப்பி உள்ளது.
இநதக்கடிதம் உச்சநீதிமன்றத்துக்கு எதிரானது.உறுதிப் படுத்தப்படாத ஆவணங்களின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை அல்லது விசாரணையை அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து, தேர்தல் நேரத்தில், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம்! என்ற நோக்கத்தில், அமலாக்கத்துறை இவ்வாறு செயல்பட்டு வருகிறது. தமிழக சடடமன்றத்தில் நிறைவேற்றியுள்ள பாதி மசோதாக்களுக்கு, தமிழக ஆளுநர் ஒபபுதல் அளித்துள்ளார்.
மீதி மசோதாக்கள், ஆளுநர் மாளிகையிலேயே, கிடப்பில் போடப்பட்டுள்ளன!”- இவ்வாறு, சபாநாயகர் அபபாவு, நிருபர்களிடம் கூறினார். அப்போது, முன்னாள் சபாநாயகர் இரா. ஆவடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்’ ஹஸன்
