Headlines

ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

உடுமலைஅக்டோபர் 11.

உடுமலை, ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. கடவுள் வாழ்த்துப் பாடல் மற்றும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

இதனை அடுத்து பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார்.

இதில் இயற்கை விவசாயம், நபார்டு வங்கியின் நிதியுதவி மற்றும் இடுபொருட்களுக்கு 50 சதவீதம் மானியம் தருகின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.

இதில் கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணபிரசாத் அவர்களும் , கல்லூரி இயக்குனர் முனைவர் ஜெ. மஞ்சுளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் ப. கற்பகவல்லி அவர்கள் விழா உரையாற்றினார் . இதனைத் தொடர்ந்து மதுக்கரை, கீரை கந்தசாமி அவர்கள் கீரை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றி சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். ஹார்புல்னஸ் நிறுவனர் சிவக்குமார் அவர்கள் ஆரோக்கியம் பற்றியும் மன ஆரோக்கியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

இதில் நாட்டு நலப்பணித் திட்ட ஆலோசகர் முனைவர் ச. அறம் அவர்களும் , கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பத்மாவதி அவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சே. மகேஸ்வரி அவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் வடிவுக்கரசி அவர்கள், முனைவர் வைஷ்ணவி அவர்கள், முனைவர் மு. கஜலட்சுமி அவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட துணை உதவியாளர்கள் மற்றும் முதலாமாண்டு , இரண்டாமாண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள், விவசாயிகள், பேராசிரியர்கள், மாணவிகள் அனைவரும் 25 க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தாய்மண் இயற்கை விவசாயி மாரிமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசியகீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *