Headlines

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு காஜி முஹம்மது அலி அன்வாரி ஹல்ரத் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட சங்கமிகு உலமாக்கள் மற்றும் அனைத்து பள்ளி முத்தவல்லிகள் முன்னிலையில் நடைபெற்றது அப்துல் காதர் தாவூதி கிராத் ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்து வைத்தார் அமானுல்லா பாகவி வரவேற்புரை வழங்கினார்.

அப்துல் ரகுமான் யுஸீபி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தின் உரையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் வக்பு திருத்தச் சட்டத்தைப் பற்றி ஒன்றிய அரசு நிறைவேற்றிய சூழ்நிலை குறித்தும் சதிதுத்தியின் பாஜில் பாகவி மற்றும் இந்தி யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப் கண்டன உரையில் தெளிவு படுத்தினர்.

சிறப்பு விருந்தினர்களாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ பெரியசாமி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை முகமது அலி சமூக ஆர்வலர் நாட்டாமை காஜா மைதீன் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டனர் இவர்களும் ஒன்றிய அரசை கண்டித்து நட்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் உரையாடினர் திண்டுக்கல் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் நௌஷாத் அலி நன்றியுரை கூறி நிகழ்ச்சியின் நிறைவு செய்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *