Headlines

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்.

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை முழுவதும் 32 ஊராட்சியும் மற்றும் 15 வார்டு முழுவதுமாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் திரு. M. மருதுபாண்டியன் அவர்களை நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம், கழகத்தில் புதிய அரசியல் உற்சாகத்தையும், தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சூழலையும், வளர்ந்து வரும் கழக பணிகளின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு, நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தலைவர் தளபதி விஜய் அவர்கள் முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் முக்கியமானதாக திருப்பரங்குன்றம் தொகுதி அடங்கிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. M. மருதுபாண்டியன் அவர்கள், கடந்த 17 ஆண்டுகளாக ரசிகராகவும், தொண்டராகவும் கழக பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கழக வளர்ச்சிக்காக தன்னலமற்ற உழைப்பையும், தொடர்ச்சியான மக்கள் தொடர்பையும் மேற்கொண்ட அவரின் நீண்ட கால பணிக்கான அங்கீகாரமாகவே இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் மருதுபாண்டியன் அவர்கள்,
“17 ஆண்டு காலமாக தளபதி விஜய் அவர்களின் சிந்தனைகளையும் அரசியல் கனவையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இன்று அந்த உழைப்பை மதித்து எனக்கு இந்த பொறுப்பை வழங்கிய தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கும், கழக பொதுச் செயலாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த அனைத்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி,” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் அவர்களை தமிழக முதல்வராக அமர்த்துவது தான் கழகத்தின் முதன்மை குறிக்கோள் என்றும், அந்த இலக்கை நோக்கி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொண்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வெற்றியை உறுதி செய்வோம் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
இந்த நியமனம், திருப்பரங்குன்றம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, 2026 தேர்தலை நோக்கி கழகம் எடுத்து வைக்கும் முக்கிய வலுவான நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *