உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை நகரம் – காபி ஹவுஸ் பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி டி. வினோத் அவர்கள் தலைமையில், மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை நகரக் கழகச் செயலாளர் திரு. க. சண்முகம் அவர்கள் செய்திருந்தார்.
இந்த நிகழ்வில்
• மாவட்ட கழக துணை செயலாளர் திரு. கோபாலகிருஷ்ணன்,
• மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. கண்ணபிரான்,
• பாசறை மாவட்ட செயலாளர் திரு. அகீம் பாபு,
• பொதுக்குழு உறுப்பினர் திரு. டி.கே. தேவராஜ்,
• உதகை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. பா. குமார்,
• உதகை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. டி. பெள்ளி,
• மாவட்ட சார்பணி நிர்வாகிகள் திரு. தாம்பட்டி சிவக்குமார், திரு. லயோலோ குமார், திரு. சார்லி, திரு. அன்பு,ராஜேஷ், சீனிவாசன், இளைஞர் அணி இணைச் செயலாளர் பிரபு,
• முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மோகன்,
நொண்டிமேடு கார்த்திக்,
• நகரக கழக நிர்வாகிகள் திரு. சிவக்குமார், உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணி பூத் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள், ஆட்சிச் சாதனைகள் நினைவுகூரப்பட்டு,
கழக வளர்ச்சி மற்றும் வருங்கால அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்…
