உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேவனூர்புதூர், செல்லப்பம் பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாலை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டா புரம், வலைய பாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத் தப்பட உள்ளது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,. என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
