நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கோலம் மற்றும் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித்குமார், திரு. அய்யனார், திரு. முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சங்க செயலாளர், திரு. ராஜ்குமார் எழுத்தர் திரு. சாருகான், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
