Headlines

திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.16:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலயில் பங்கேற்கும் விழாக்கள் நடைபெறும் இடங்களை, சபாநாயகர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, பாளையங்கோட்டைஃதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன் ஆகியோர், இன்று (டிச.16) காலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதன பின்னர், அமைச்சர் நேரு, செய்தியாளரகளிடம் பேசினார்.

அப்போது, அவர் க கூறியதாவது:- “இம்மாதம்21- ஆம் தேதி காலையில், முதலமைச்சர் ஸ்டாலின், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை திறந்து வைக்கிறார். அதனை தொடர்நது, பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 45 ஆயிரம் பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கியும் வைத்து, விழா பேருரை ஆற்றுகிறார். விழா நடபெறும் இடத்தில், அரங்கம் அமைக்கும் பணிகள், வேகமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 50,000 பேர் அமரும் வகையில், அரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்காக, அனைத்துத்துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து பணியாற்றி, வருகின்றனர். இந்த விழாவின் நிறைவில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 72 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிசசைக்கான மேம்பட்ட மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பின்னர் கிறிஸ்தவ நல்லெண்ணம் இயக்கம் சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடைபெறும், பாளயங்கோட்டை டக்கரம்மாள்புரம் தரிசன புண்ணியபூமி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்!”- இவ்வாறு, அமைச்சர் கே.என். நேரு, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம், தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன், முன்னாள் ராஜ்யசபா எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர், உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *