கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை வீரர்கள் மூலம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு படைப்பு போலீசார் எம்.குன்னத்தூர்.கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அவர்களை சிறப்பு படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் விழுப்புரம் நத்தமேடு கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் மூலம் கஞ்சா பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதையடுத்து சிறப்பு படைப்பு போலீசார் முருகதாஸ் கைது செய்து விசாரித்த நிலையில் எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான திவாகர், 24 வயதான வெற்றிவேல், 24 வயதானப் வெங்கடேசன் ஆகிய மூன்று பேரும் கஞ்சா வியாபாரம் செய்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர் இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சிறப்பு படைப்படை போலீசார் அவர்களை திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதையடுத்து நான்கு பேர் மீதும் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் : விஜயகாந்த்