அக்டோபர் : 22 – உடுமலையில் இன்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கே சி பி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி தவளை கள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தவளைகள் சத்தத்தால் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டனர்.
இதேபோல் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் உடுமலை சுற்று பகுதிகளில் இரவு பலத்த மழை பெய்தது.உடுமலை மலையாண்டிபட்டினம் மெயின் ரோட்டில் நூலகத்தில் இருந்து உயர் நிலை பள்ளி செல்லும் பாதையில் கட்டப்பட்ட பாலம் உயரமாகவும் குடியிருப்பு பகுதி பள்ளமாகவும் இருப்பதால் இதில் வழிந்து ஓடும் நீர் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளுடன் சென்று பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
குப்பைகள் வீட்டுக்குள் வந்ததால் குடியிருப்போர் அவதிப்பட்டனர்.
உடுமலை செய்தியாளர் : மணிவேல்