விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் சேக் முகமது விடுத்துள்ள வரவேற்பு அறிக்கையில் தெரிவித்திருப்பது
கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை,
கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாடு,
அமிருத் பாரத் ரயில் சேவை – வரவேற்பு
கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும், இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவித்துள்ள செய்தியை நாகர்கோவில் மாநகர தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
அதேபோல், கன்னியாகுமரி ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருவதும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அடிப்படை கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதும் மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கைகளாகும்.
மேலும், நாகர்கோவிலில் இருந்து மங்களூரு வரை இயக்கப்பட உள்ள “அமிருத் பாரத்” புதிய ரயில் சேவையை வருகிற 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதும், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த முக்கியமான முன்னேற்றமாகும்.
இந்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால், கன்னியாகுமரி மாவட்டத்தின் போக்குவரத்து வசதி பெரிதும் மேம்பட்டு, சுற்றுலா வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த முக்கிய திட்டங்களை அறிவித்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசிற்கும் நாகர்கோவில் மாநகரத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த பணிகள் காலதாமதமின்றி தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
