Headlines

கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை பகுதியில், விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் . கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும்.

மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது.

இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கோவையை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இருகூர் தொடங்கி துடியலூர் வரையிலும், நீலாம்பூர் தொடங்கி மதுக்கரை வரையிலும் கோவை மாநகராட்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

ஆனால் மாநகராட்சி எல்லையை பொறுத்தவரை இன்னும் சில பகுதிகள் இணையவில்லை. அதேநேரம் அவை கோவையின் புறநகர் பகுதிகளாக உள்ளன.

கோவையில் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலைகள் தற்போது அமைக்கப்படடு வருகின்றன. சில சாலைகள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியில் 503 கி.மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர் தூரத்துக்கு முடிக்கப்பட்டு உள்ளது என்றும் 1,519 சாலை மேம்பாட்டு பணிகள் சுமார் 226.54 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகின்றன.

என்றும், அவர் தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்தவகையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். அதன்படி சுமார் 3,456 சாலைப்பணிகள் 503.67 கி.மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

அதில் முதற்கட்டமாக, 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர் தூரத்துக்கு நிறைவு பெற்று உள்ளது.

தற்போது கூடுதலாக 1,519 சாலை மேம்பாட்டு பணிகள்226.54 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மற்றும், கோவை மாநகராட்சியில்,கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், மாநில நிதிக்குழு சிறப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 5,215 பணிகள் 860.69 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.415 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளது” எனறும், அவர் கூறியுள்ளார்.


கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *