நாகர்கோவில், ஜனவரி 11 :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது அவர்கள் நன்றி தெரிவித்து, கட்சியின் வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தெளிவான கருத்துகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி, மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் மற்றும் கருத்தியல் பரப்புரை பொறுப்பாளர் கோட்டார் யூசுப் ஆகியோர் தங்களது நிறைவான, வழிகாட்டும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெருவாரியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கூட்டம் முழுவதும் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் மக்கள் சேவைக்கான உறுதிமொழிகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
