உலக சுற்றுலா தின விழா திருமூர்த்திமலையில் கொண்டாடப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வு கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் உடுமலையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பணிகள் தமிழ்நாடு அரசு சுற்றுலாக் கொள்கை உலக சுற்றுலா தின விழா தொடர்பாக அரவிந்த் குமார் பேசினார். பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்திமலையில் கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா தொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தவும் சுற்றுலா கருத்தரங்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரியின் சுற்றுலாத்துறை உதவி பேராசிரியர் விஜய் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post Views: 1