Headlines
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Read More
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு…

Read More
பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆயக்குடி பேரூர் செயலாளர்…

Read More
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக மாதந்தோறும் இரண்டு லட்சத்திற்கு…

Read More
பழனியில் பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார்….

Read More
பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து…

Read More
1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என வளமைய பட்டதாரி ஆசிரியர்ஙள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி திண்டுக்கல் தனியார் மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 1500 பயிற்சி ஆசிரியர்களை…

Read More
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்.

கோவை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் பாப்பம்மாள்.

Read More
பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

Read More
பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்புக்குழுவினர் மாவட்ட…

Read More