கன்னியாகுமரி, அக். 08 :
“உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
வாக்களிக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.
அதில் முக்கியமான இரண்டு : முதலாவது, நமது ஆண் பிள்ளைகளை அழிக்கும் போதைப் பொருட்கள்,
இரண்டாவது, பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது,” என்று அவர் கடுமையாக சாடினார்.
இந்நிகழ்வில் பா.ம.க குமரி மாவட்டச் செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் – ஜெனீருடன்,
குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
