Headlines

அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படிக்கும் மகளிர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாருமான வெங்கடேசன் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் உணவு முறையாகவும் தரமாக வழங்கப்படுகிறதா? வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார், அப்போது மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று பதில் கூறினார்கள் ,மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்தகுமார் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் சீலராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சத்யராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *