Headlines

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்! நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!

ஆண்களுக்கு 8 மற்றும் 10 கி.மீ.; பெண்களுக்கு 5 கி.மீ. ஓட்டம் – வெற்றியாளர்களுக்குப் பரிசுத்தொகை வங்கிக் கணக்கில் வழங்க ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ.ஆ.ப., பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி முன்னிலையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் விளையாட்டு அரங்கம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைப் போற்றும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கிலும் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டரும், பெண்களுக்கு 5 கிலோமீட்டரும் நிர்ணயிக்கப்பட்டது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டரும், பெண்களுக்கு 5 கிலோமீட்டரும் ஓட்டப்பந்தய தூரமாக அறிவிக்கப்பட்டது.

போட்டியாளர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறையைக் கருத்தில் கொண்டு ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறு வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் போட்டி நடைபெற்றது.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களுடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. பரிசுத்தொகையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வெற்றியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களும் இளம்பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடியது போட்டிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *