Headlines

கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கணியூர் காவல் ஆய்வாளர் திருமதி பஞ்சலட்சுமி தலைமை தாங்கினார். மாணவர்களிடையே உரையாற்றிய அவர், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் சமூகச் சீர்கேடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், நல்லொழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கல்வி கற்று, சமூகத்தில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். போதைப்பொருட்கள் இல்லாத விழிப்புணர்வு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *