பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல கிரிவீதியில் கட்டணமில்லா மின்கல ஊர்தி (Battery Vehicle) சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதுவரை கிரிவீதியில் 11 இருக்கைகள் கொண்ட 14 ஊர்திகள், 23 இருக்கைகள் கொண்ட 22 ஊர்திகள் மற்றும் 14 இருக்கைகள் கொண்ட 1 ஊர்தி என மொத்தம் 37 மின்கல ஊர்திகள் பயன்பாட்டில் இருந்து வந்தன.
இந்நிலையில், இன்று (02.11.2026) சுப்ரீம் மொபைல்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. S.A. ராதாகிருஷ்ணன், இயக்குநர் திருமதி. R. தீபபிரியா, இயக்குநர் திரு. N. செல்வராஜ் மற்றும் இயக்குநர் திருமதி. S. பாரதி ஆகியோர் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 23 இருக்கைகள் கொண்ட புதிய மின்கல ஊர்தி ஒன்றை திருக்கோயில் நிர்வாகத்திற்கு உபயமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் கிரிவீதியில் இயக்கப்படும் கட்டணமில்லா மின்கல ஊர்திகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.
துணை ஆசிரியர் நா.ராஜாமணி – 8973350663
