Headlines

275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேற்றம்: பழனி பள்ளி மாணவர்கள் சாதனை!

275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேற்றம்: பழனி பள்ளி மாணவர்கள் சாதனை! 275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேற்றம்: பழனி பள்ளி மாணவர்கள் சாதனை!

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஐவர் மலையில், பள்ளி மாணவர்கள் 3 பேர் 275 படிக்கட்டுகளிலும் தொடர்ச்சியாக யோகாசனம் செய்தபடி மலையேறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

பழனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான நகுலன், மேகவர்ணிகா மற்றும் ரெணுஷ்கா ஆகிய மூவரும் யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம்:

ஐவர் மலையின் அடிவாரத்தில் தொடங்கி உச்சி வரை உள்ள 275 படிக்கட்டுகளிலும், ஒவ்வொரு படியிலும் சூரிய நமஸ்காரம், கோணாசனம், அர்த்த கோணாசனம், தடாசனம், வீராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களைச் செய்தபடி மாணவர்கள் உறுதியுடன் மலையேறினர்.

குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு அங்கீகாரம்:

மாணவர்களின் இந்த வித்தியாசமான மற்றும் கடினமான சாதனை முயற்சியைக் ‘குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு’ (Global World Record) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேரில் ஆய்வு செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தது.

இயற்கை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சாதனை படைத்த இந்தச் சுட்டீஸ்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *