Headlines
முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

உடுமலை அக்டோபர் 31. மழை நன்றாக பெய்வதால் முதல் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை ஏழு குளங்கள்பாசனப்பகுதியில் கரும்பு பிரதான பயிராக இருந்தது. ஓராண்டு பயிராக இருப்பதால் சாகுபடிக்கு நீர வளம்‌உள்ள விளை நிலங்களே தேர்வு செய்யப்படுகிறது. அவ்கையில் பள்ளபாளையம் சுற்றுப் பகுதியில் வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் நவம்பர், டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் முதல் பட்டமாகவும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடுபட்டமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பழைய தொழில்நுட்பத்தின் படி…

Read More
சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

உடுமலை அக்டோபர் 31. உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட…

Read More
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது...

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தலைமையில் 31.10.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் உட்பட பலர் உள்ளனர்.

Read More
கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண் கைது..

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண் கைது..

விழுப்புரம் மாவட்டம்: திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பம் அருகே மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் அழகிரி மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்க்கொண்டதில் தேவி(36) க/பெ சிவநாராயணன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடமிருந்து இருந்து 180 ml அளவு கொண்ட 140 பாட்டில்கள் மற்றும் பணம் ரூபாய் 2000 கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Read More
மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்: நேரில் ஆய்வு..

மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்: நேரில் ஆய்வு..

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உதவி திட்ட அலுவலர் நாகமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட பலர் உள்ளனர்.

Read More
வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை...

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை…

விழுப்புரம்: விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று ஆலோசனைகளை வழங்கினார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட பலர் உள்ளனர்.

Read More
இந்தியாவின் இரும்பு மனிதர் - பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..

இந்தியாவின் இரும்பு மனிதர் – பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..

இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150-ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர் திரு.பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு.இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவித்தலைமையாசிரியர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். மதுரை மாவட்ட…

Read More
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரை சேர்ந்த 17- வயது சிறுமி இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல மர்மங்கள் வெளிவரும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து…

Read More
கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மா vayadhu(50)கூலித் தொழிலாளியான இவர் இன்று கடலூர் சத்திரம் அருகே கோரனப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு சோலை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தப்போது விசப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் பத்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிரூபர்R. விக்னேஷ்

Read More
சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! - அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு...

சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! – அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு…

கன்னியாகுமரி, அக்.30 அணையாடி சான்ஜோ ஆங்கில மீடியம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடத்தில் வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி மாணவி எம்.அக்ஷயா, டைவ் அடித்தபடி தன்னுடைய தலையால் 201 ஓடுகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின்…

Read More