தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்
பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் , நாராயண கவிராயர் பேரன் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், உடுமலை நாராயண கவிராயர் இலக்கிய பேரவை நிர்வாகிகள் அமிர்தநேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை நாராயண பகுத்தறிவு கவிராயர் இலக்கியப் பேரவையின் தலைவரும் நாராயண கவிராயரின் பேரனுமான சுந்தர்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது..
உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்துக்கு நாராயண கவிராயர் பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும், மணிமண்டபத்தில் தற்பொழுது புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புத்தகங்களை எண்ணிக்கை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். மேலும் மணி மண்டபம் அருகில் குடிமை பணி தேர்வுக்கு தயாராக மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். இதில் யுஎஸ்பி குமார் , எம்.ஆர்.பாபு , ராமசாமி பர்வதவர்த்தினி , நகர்மன்ற துணைத் தலைவர் கலைராஜன் , நகர துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்ட வர்த்தக அணி தனபால் , ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது , செழியன் , மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் ஆறுச்சாமி, அர்ஜுன், விஜயலட்சுமி மற்றும் நகர ஒன்றிய , பேரூர் கழக நிர்வாகிகள் , கிளைக் கழக சார்பணி நிர்வாகிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் கழக உடன்பிறப்புகள் , அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மணிவேல்