உடுமலை : நவம்பர் 01.
பூளவாடி அரசு மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

உடுமலை வழக்கறிஞர் .சத்தியவாணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.குடிமங்கலம் காவல்துறையினர் சட்ட உதவி பற்றி கூறினர். நிறைவாக ஆசிரியை மங்களவினாயகி நன்றி கூறினார்.
