செப் 21 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது.
வீட்டினுள் அஸ்வினி (18) என்ற இளம்பெண், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தீக்காயத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக இரணியல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) மருத்துவ அணி செயலாளர் அசார் தலைமையிலான குழுவினர் சடலத்தை மீட்டு, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இளம்பெண்ணின் மரணத்தைச் சூழ பல கேள்விகள் எழுந்துள்ளன. இது தற்கொலையா? இல்லையெனில் யாரேனும் திட்டமிட்டு செய்த கொலையா? என்ற சந்தேகத்தில் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்த உண்மை விரைவில் வெளிச்சம் பார்க்குமா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“மரணம் தற்கொலையாக இருக்குமா? அல்லது மர்மக் கொலையா?” – போலீசின் விசாரணை முடிவில் மட்டுமே தெளிவு வரும் என அதிகாரிகள் கூறினர்.
திருவிதாங்கோடு சிறப்பு நிருபர் – பீர் முகமது.
