Headlines

கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு.

கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், “இல்லம் தேடி கல்வி” முதல் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வரை கல்வித்துறையில் தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 80-வது வார்டு செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

80வது வார்டிற்கு உட்ப்பட்ட ​செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 கூடுதல் வகுப்பறைகளின் திறப்பு விழா இனிதே நடைபெற்றது.

​இந்த விழாவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணபதி ப. ராஜ்குமார் M.P. அவர்கள் தலைமை தாங்கி, புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி மேயர் திருமதி. கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான திரு. #பெ_மாரிசெல்வன் அவர்களின் சீரிய முயற்சியால், இந்த வார்டில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் உடல்நலமே கல்விக்கு அடிப்படை என்பதைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரக் குழுத் தலைவர் என்ற முறையில் பெ. மாரிசெல்வன் அவர்கள் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் மற்றும் புதியதாக நவீன கழிப்பறைகள் வசதிகளை செய்து கொடுத்துள்ளார்

​பாராட்டும் பொதுமக்கள்
​”கல்விக்கண் திறந்த காமராசர் வழியில், இன்று நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் திராவிட மாடல் அரசின் இத்தகைய பணிகள் பாராட்டுக்குரியவை” என பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களும் பொதுமக்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

​இந்நிகழ்ச்சியில், மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார்,மத்திய மண்டல உதவி ஆணையாளர் நித்யா, உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளம் உதவி பொறியாளர் நாகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபால், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன்,பள்ளித் தலைமை ஆசிரியர் தேவசகாயம், ஆசிரியர்கள், மற்றும் மாநில தீர்மானம் குழு இணை செயலாளர் நாச்சிமுத்து பகுதி பொறுப்பாளர் முருகேசன் 81வது பகுதி துணை செயலாளர் பழக்கடை முத்து முருகன் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், வட்டக் கழக பொறுப்பாளர்கள் ராஜேஷ் கோபிநாத் ராஜேஸ்வரன், வை.இளங்கோ, சந்துரு , குமார் மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *