விழுப்புரம் : நவம்பர்,26.
தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் இரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார்.
உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் இரா.கண்ணப்பன், மு.சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வாசன், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், நகர கழக செயலாளர்கள் இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல், கோட்டக்குப்பம் ஜெயமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் பா.தெய்வசிகாமணி, தே.முருகவேல், பிரபாகரன், கப்பூர் ராஜா, கொத்தமங்கலம் சந்திரசேகர், கு.செல்வமணி, வே.கணேசன், சீனு செல்வரங்கன், இராமைதிலி ராஜேந்திரன், கோ.பாஸ்கர், ச.புஷ்பராஜ், கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய , நகர, பேரூர், வார்டு , கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
