பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்காண 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 400 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்று கொண்டனர். இவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்தில் தரவரிசை பட்டிமயில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இளநிலை மாணவர்கள் மூவரும், முதுநிலை மாணவர்கள் இருவரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் இளநிலை மாணவர்கள் மூவருக்கும் என எட்டு மாணவர்கள் இடம் பெற்றனர்.அவர்களுக்குக் கல்லூரி மாற்பாக தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பித்தனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் புதுதில்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) உறுப்பினர். செயலாளர் பேராசிரியர் ராஜீவ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்ககளயும் பரிசுகளையும் அளித்தார் இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் கோ .தனவெட்சூமி அம்மாள், முதன்மை தலைவர் R.K ரகுராம் ஆகியோர் தலைமையில் நடைபற்றது .
கல்லூரி முதல்வர் முனைவர் து.வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ராஜீக் குமார் சிறப்புரை ஆற்றினார். இதில், கல்வியின் அவசியத்தினையும், மாணவர்களின் அறிவு வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்றும் கூறினார். மாணவர்கள் சுய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் வளாக வேலை வாய்ப்பில் சுமார் 340 மாணவ மாணவிகள் தங்கள் படிப்பு முடியும் முன்பே பல்வேறு பண்நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன எண்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பட்டங்களை பெற்ற அனைத்து மானாவ மாணவியற்கும் PSNA கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெறிவித்துக் கொண்டனர்.