நெல்லையில் அக்.21 ம் தேதி நடந்த 5 ம் வகுப்பு பயிலும் நெல்லை மாணவி திருவள்ளுவரின் உருவத்தை 1330 திருக்குறளை எழுதி 33 அடி உயர கதர் துணியில் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார் .
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மாரிசெல்வம், திருச்செல்வி ஆகியோரின் மகள் வர்ஷினி 9 வயது ஆகும் இவர் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கொரோனா காலத்தில் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்காக நெல்லை சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றார்.அதைத்தொடர்ந்து ஓவியத்தில் வித்தியாசமான சாதனை படைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.குமரிகடலில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் உருவத்தை திருக்குறளால் ஓவிய மாக வரைய முடிவு செய்தார். இதற்காக 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து கற்றுக் கொண்டார்..
தொடர்ந்து நெல்லை,அரசு அருங்காட்சியகத்தில் இந்த ஓவிய சாதனையை படைக்கும் நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட மாதம் 21 ல் மேற்கொண்டார்.அதில் திருவள்ளுவர் உருவத்தை 33 அடி நீளம் 15 அடி அகலத்தில் ஆயிரத்து 330 திருக்குறளால் வரைந்து திருவள்ளுவரின் தத்துரூப உருவத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் எம்எல்ஏ, மற்றும் மேயர் ராமகி ருஷ்ணன் ஆகியோர் மாணவி வர்ஷினி மற்றும் அவரது பெற்றோரை பாராட்டி பேசினர்.
பங்கேற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன், ஒவிய ஆசிரியர் மகாராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்று வர்ஷினியை பாராட்டியுள்ளனர்.
அதை தொடர்ந்து சாதனையை பதிவு செய்ய பெற்றோர் விண்ணப்பித்தனர்.ஆய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த போது திருக்குறள் தொடர்பாக வாசிப்பது,ஒப்பிப்பது,சிறிய அளவில் எழுதுவது என பதிவுகள் இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த வர்ஷினி(9 வயது ) இளம் வயது கொண்ட தனி நபர் சாதனையாக 33 அடி உயர கதர் துணியில் ஓவியமாக வரைந்து சாதனை செய்திருப்பதும் ,தனி நபர் சாதனை என்ற உட்பிரிவின் கீழ் டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.தொடர்ந்து உலக சாதனையாளர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் நிறைய சாதனையாளர்களை உருவாக்க தொடர்ந்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறுகிறார்.