திருநெல்வேலி,நவ.29:- நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, வட்டார மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு, மாநில இணைத்தலைவர் “வழக்கறிஞர்” ஏ.மகேந்திரன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், ஊத்துமலை ஜமீன்தாருமான எஸ்.பி.முரளிராஜா ஆகியோர் கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி குறித்து, உரையாற்றி, மாவட்டம் முழுவதும் கிராம கமிட்டிகள் மற்றும் வார்டு கமிட்டிகளை அமைக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துக்கூறி, அவை தொடர்பாக நலால ஆலோசனைகளையும், வழங்கினர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல மற்றும் வட்டார நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். கிராம கமிட்டிகள், வார்டு கமிட்டிகள் ஆகியவற்றை சீரமைத்திட வேண்டும்! கட்சியில், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்திட வேண்டும்! மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனுக்கு, முழு உருவ வெண்கலச்சிலையை, திருநெல்வேலியில் முக்கிய இடத்தில், நிறுவிட வேண்டும்!- ஆகிய தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து, தன்னுடைய 54-வது பிறந்த தினத்தை கொண்டாடும், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கர பாண்டியனுக்கு, வந்திருந்த அனைவரும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” தெரிவித்தனர். முன்னதாக, “பிறந்த நாள் கேக்” வெட்டப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்