செப் 21 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.
ஆனால், பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ரோட்டரி கிளப் சார்பில் அனைத்து வசதிகளுடனும் புதிய கழிப்பறை கட்டி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், அந்த கழிப்பறை மாணவிகளுக்கு பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டு காலியாக உள்ளது.
மேலும், கழிப்பறை சுற்றுப்புறம் புதர்மண்டிகள் நிறைந்த நிலையில் இருப்பதால் மாணவிகள் பயன்பெற முடியாத நிலை நீடிக்கிறது.
இதையடுத்து, பள்ளி மாணவிகளின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும், புதர்மண்டிகளை அகற்றி கழிப்பறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிதாங்கோடு சிறப்பு நிருபர் – பீர் முகமது
