ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பிறகு மீண்டும் அது போன்ற ஒரு கொடூரமான போர் எங்கும் நிகழாமல் இருக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இணைந்து நவம்பர் 11ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன.
அந்த வகையில் இன்று நவம்பர் 11ஆம் தேதியை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையிலான நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள PSG CONVENTION CENTRE அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.உலக அமைதி குழு என்ற அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அமைதியை பறைசாற்றும் விதத்தில் வெண்மை நிற ஆடையில் சுமார் 1500 பேர் பங்கேற்றிருந்தனர். கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், மருத்துவ துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் 10 மணி முதல் தியான நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் சரியாக 11 மணிக்கு அவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை அனைத்து அமைதியை கடைப்பிடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள உலக அமைதி பீடம் நிறுவனர் குரு மகான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்ற சூழலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த எட்டரை கோடி பேர் இணையதளம் மூலமாக இந்த அமைதி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது……
காலை நிகழ்வு முடிந்த பின் சிறப்பு விருந்தினர்களுக்கு அறக்கட்டளை அறங்காவலர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். 2.30 மணியளவில் மதிய நிகழ்ச்சி துவங்கியது. DR கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாறினார்கள். பால பிராஜபதி அதிகளார் வாழ்த்து ரை வழங்கினார்கள். Swisraland UPF ஐ சேர்ந்த பிரியா அவர்கள் ஜானகிதம் இசைத்தார்கள். மூவருக்கும் குருமகான் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். தொடர்ந்து குருமகான் அவர்கள் ஞான உதய தீப அருளரை ஆற்றி அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்கள். ஒரு நிமிடத்தில் எவ்வளவு அளப்பறைய ஆற்றல்கள் நிரம்பியுள்ளது என்பதை உணர்த்தியது இந்த நிகழ்வு. கோவை மாநகரில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.
உடுமலை : நிருபர் : மணி